அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, September 07, 2005

கவிதை சொல்...

மரபு தவிர்
இலக்கணம் தாண்டு
இயற்கை சொல்
மழை கவனி
குழந்தை பார்
கவிதை எழுது
காவியம் விவாதி
ஓவியம் வரை
ஓய்தல் மற
இசை ரசி
கடிதம் எழுது
எல்லாவற்றிலும் கவிதை சொல்
புதுகவிதையா மரபு கவிதையா
கேள்விகள் இல்லை...
யாருக்கு புரிய வேண்டும்
உனக்கும் எனக்கும் தவிர..

விளையாட்டு

ஒரு நவம்பர் மாத
மழை நாளில் நீ கேட்டாய்
'நாம் ஒரு விளையாட்டு விளையாடுவோம்..'

'என்ன விளையாட்டு'
'உன்னை நானும் என்னை நீயும்
புரிந்து கொள்ள வைக்கும் விளையாட்டு...
ஜோடி பொருத்தம்...'

'எப்படி'
'ஒரு காகிதத்தில் நாம் சில பெயர்களை
எழுதுவோம்'
'நான் எழுதுவெதெல்லாம் உனக்கு பிடித்தது'
'நீ எழுதுவெதல்லாம் எனக்கு பிடித்தது'
'நம்மை நாம் புரிந்து கொண்டமைக்கு இது சவால்...'

நாம் எழுத ஆரம்பித்தோம்
சில நிமிடங்களில்
காகிதங்கள் கை மாறின

இருவரும் ஒருவரை ஒருவர்
பார்த்து கொண்டோம்

என் காகிதத்தில் உன் பெயரும்
உன் காகிதத்தில் என் பெயரும் தவிர..

நாம் எழுதியவற்றில் எல்லாம் ஒத்து போயின...
அதனால் என்ன...?

துணை

நாம் ரசித்த இசையை - இப்போது
நான் ரசிக்கிறேன் தனிமையில்
எனினும் இனிமைதான் - என்னோடு
உன் நினைவுகள்.

உயிர்ப்பு

என் தலையணையின்
பூக்களும் மலரும்...
கனவில் நீ வரும் போது

Monday, September 05, 2005

நினைவாக...

நாம் வீடு திரும்பியபோது
மழை விட்டிருந்தது
ஜன்னலோரங்களில்
இன்னும் ஈரம்...