அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, July 30, 2006

ஒரு பிரிவின் மிச்சங்கள்…

பிரிவின் மிச்சங்கள்
பெரும்பாலும் சுமைகளாகின்றன
அழிந்த கோலங்களின் நிறங்களில்…
எறும்புகள் நிறைந்திருக்கின்றன..
சில வண்ணத்துபூச்சிகளின் மரணத்தில்
எல்லா வண்ணங்களும் மறந்து போவதை போல…
நிலவும் நானும் ஒற்றைவானமும்
தனிந்திருந்ததை போலவே… நீயும் இருந்திருப்பாய்..
இரவின் தனித்திருந்த தருணங்களில்
ஸ்பரிசங்களின் மிச்சங்களை கொண்டு…
என்னில் புதைந்திருக்கும் நினைவுகளின் மிச்சங்களை
துடைத்து கொள்கிறேன்…
அவை விட்டு சென்ற தடங்களில் எல்லாம்
ஏதோ வகையில் உன் பெயர் சொல்லப்பட்டு இருக்கிறது…
காலி குடுவைகளில் இருந்த தண்ணீரின் நினைவுகளை போல..
நம் பிரிவின் மிச்சங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன…
போர்வைகளின் உன் வாசத்தை சுமந்து கொண்டு…
என் காலங்கள் எல்லாம் விழித்து இருக்கிறன…
தனித்த புல்லாங்குழல் இசையில்…
மெல்லிய பனியில் மலர்ந்து நிற்கும் சில மலர்களை..
உனக்காக சேமிக்கின்றேன்…
நினைவுகளை போலவே…

1 comment:

துபாய்வாசி said...

ஒவ்வொரு கவிதையும் அருமை!

இவைகளில் ஏன் ஒரு பின்னூட்டமும் இல்லை என்பதே என்னுள் தோன்றிய பெரும் கேள்வி.

மேலும் எழுதி மகிழ்வியுங்கள். வாழ்த்துக்களுடன்...