அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, February 13, 2008

மவுனத்தை பற்றிய இசைக்குறிப்புகள்...

மவுனத்தை பற்றிய இசைக்குறிப்புகளை எழுதுவோம்
என ஒரு முறை தீர்மானித்தோம்
ஒலிக்குறிப்புகளை பற்றி நீ தகவல் தருவதாக சொன்னாய்

பறவைகளின் சிறகசைக்காத ஒலியும்,
மாலை வெயில் தெருவில் விழும் ஒலியும் திரட்டி கொடுத்தாய்
ஜுவாலைகளுக்குள்ளும், நீரோடைகளின் ஆழத்திலும்
நான் கொஞ்சம் திரட்டினேன்

இசைக்காத கருவிகளின் ஒலிக்குறிப்புகளை பற்றிய
கருத்து வேறுபாடு நம்மில் எழுந்த போது
இருவருமே அக்குறிப்புகளை நிராகரித்தோம்

புணர்வுக்கு பின்னான மரணத்தை ஒத்த ஒலிக்குறிப்புகளை
ரகசியமாக திரட்டி கொண்டோம்.

பழைய வீட்டின் யாரும் உபயோகப்படுத்தாத கண்ணாடிகள்
சில ஒலிக்குறிப்புகளை நமக்கு வழங்கியது

மலர்வதற்க்கு முன்னான பூக்களும், தீட்டப்படாது மறந்த வர்ணங்களும்
கொடுத்ததை தவிர - திரட்ட ஏதும் இல்லாத இறுதி வினாடிகளில்
நாம் பரிமாறி கொண்ட மவுனங்கள்
இதுவரை நாம் சேமித்ததை விட ஒலிமிகுந்ததாய் இருந்ததன

8 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தக் கவிதையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

'மாலை வெயில் தெருவில் விழும் ஒலி'
'புணர்வுக்குப் பின்னான மரணத்தை ஒத்த ஒலிக்குறிப்புகள் (அதுவும் ரகசியமாய்!).'

நல்ல கவி மொழி உங்களிடம் இருக்கிறது. நிறைய எழுதுங்கள் என்பது என் வேண்டுகோள்.

அய்யனார் said...

beauty

Anonymous said...

உங்க உரைநடை எழுத்துக்களக் காணோமே? தனியா
எழுதிட்டிருந்தப்ப படிச்சது. தமிழ்மணத்திற்கு நல்வரவு!

அன்புடன் அருணா said...

//நாம் பரிமாறி கொண்ட மவுனங்கள்
இதுவரை நாம் சேமித்ததை விட ஒலிமிகுந்ததாய் இருந்ததன//

நிறைய நேரங்களில் இதுதான் உண்மை.
அன்புடன் அருணா

எம்.ரிஷான் ஷெரீப் said...

அருமையான கவிதை..

//பழைய வீட்டின் யாரும் உபயோகப்படுத்தாத கண்ணாடிகள்
சில ஒலிக்குறிப்புகளை நமக்கு வழங்கியது //

பிடித்திருக்கிறது !!!

Valaipookkal said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

ரௌத்ரன் said...

அழகான கவிதை...

ஸ்ரீ said...

wow.:-))))))