அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Friday, November 13, 2009

ஊழியின் ஒற்றை விதி…

 

P1000197

பெரு மழை ஒன்று பெய்து ஓய்ந்ததை போல
இருக்கின்றது இந்த அமைதி

தனிமையின் சிறகுகளில் ஈரம் உதிர்த்து ஜன்னல் வழியே நிற்கிறேன்

கோடை இறுதியின் மழையை ஒத்து இருந்த தருணத்தின் மிச்சங்கள்
தோட்டமெங்கும் நிறைந்து கிடந்தன

கோப்பையின் சூடான தேனீரும்
ஒலிக்கும் மெல்லிய குரலிசையும் தவிர
அறையில் யாருமில்லை என்பதை போல
கலைந்து கிடக்கின்றன

போர்வைகளும் காகிதங்களும் இசையும் கொஞ்சம் காலமும்...

நாள்காட்டியில் தொங்கும் நேற்றைய பொழுதுகளும் - எழுதி முடிக்கபடாத ஒரு கவிதையும் மட்டுமே
வாழ்ந்து இருந்த காலங்களை சொல்லின

இரவில் மறுபடியும் மழை தொடங்கியதாக -
பின்னொரு முறை நீ சொன்னாய்

அந்த மழை ஒரு பேரூழி கால நிசப்தத்தை முடித்து வைத்ததாக  -
ஒரு கதை சொல்லி
என் மரணத்துக்கு பின்னால் சொல்லி கொண்டிருந்தான்.

நிகழ்வுகளை தொகுத்து பார்க்கையில் - 

அன்று பெருமழைக்காலத்தின் ஒற்றை விதியென
விரிந்திருக்கும் ஆகாயத்தின் ஓரங்கள்

மறுபடியும்  பூக்க தொடங்கியதென சில குறிப்புகள் சொல்கின்றன..

4 comments:

வானம்பாடிகள் said...

/அன்று பெருமழைக்காலத்தின் ஒற்றை விதியென
விரிந்திருக்கும் ஆகாயத்தின் ஓரங்கள் மறுபடியும் பூக்க தொடங்கியதென சில குறிப்புகள் சொல்கின்றன../

அருமை!

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு முத்துகுமார் உங்கள் எல்லா கவிதைகளும்.

ஜீவி said...

//நாள்காட்டியில் தொங்கும் நேற்றைய பொழுதுகளும் - எழுதி முடிக்கபடாத ஒரு கவிதையும் மட்டுமே
வாழ்ந்து இருந்த காலங்களை சொல்லின//

வாழும் இருப்பைச் சொல்வதற்குக் கூட
இப்படிப்பட்ட புலனுக்குத் தட்டுப்படுகிற
அடையாளங்கள் வேண்டும் போலும்.

கவிதை நண்றாக இருந்தது.

padma said...

எல்லா கவிதைகளும் அருமை நிறைய எழுதுங்க