அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, March 23, 2010

தேநீரின் தருணங்கள்..

ஒரு கோப்பை தேநீர் தயாரிப்பது மிகவும் அற்புதமான தருணம்...
கொதிநீரின் பதமும், தேநீர் துகளின் மணமும் யாரையும் நினைவுருத்தாதவரையில்

சூழ்ந்து பரவும் காலத்தின் ஈரம் அடர்த்தியான நினைவுகளாக இருக்கிறது...
அவை தேநீரின் கறை போல சில தருணங்களையும் நினைவுபடுத்தி கொண்டே இருக்கிறது.

தேநீருக்கென்ற காலம் இருந்ததில்லை - அடர் பனிக்கால மழையிலும், யாருமற்ற முன்னிரவிலும் அது தன் இருப்பை வெளிப்படுத்தி கொண்டே இருந்திருக்கின்றது.
தனிமையும், பயணங்களும், இசையும் - உன்னை
அருகாமையில் வெளிப்படுத்தி கொண்டிருப்பதை போல.

தனித்திருந்த பின் மதிய நேரத்தின் ஒரு நாள் -
தேநீர் கோப்பையும் நானும் உரையாடி கொண்டிருந்தோம்...
அது தனிமை பற்றிய உரையாடலாக மட்டும் இல்லை என்பது அறிந்தும்...