அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, September 25, 2010

தருணங்களின் கவிதைகள்

மழைக்கு பின்னான எல்லா வண்ணங்களிலும்
வியாபித்து இருக்கிறது வாழ்வின் தருணங்கள் - எனினும்
மவுனமான மழையின் தாழ்வார சாறல்களை போல
நிறமற்றதாகவும் இருக்கிறது

தனிமையில் வாழ்தல் குறித்த கவிதைகள்
ஒரு இனம் புரியாத வாஞ்சையை உருவாக்குகின்றன
மொழிக்கு பரிச்சயமில்லாத ஒலிகுறிப்புகளின் தொகுப்பில்
கவிதையின் வார்த்தைகள் ஆழமாய் புதைந்துள்ளன

யாருமில்லாத வீட்டின் தரையில் படுத்தபடி
எறும்புகளை நண்பனாக்கி கொள்கிறேன்
ஒரு பெரும் வாழ்வின் கதையை சொல்லியபடி
இருவருக்குமான தருணங்கள் கவிதையாகின்றன.